குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம் - பீதியில் பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் சிறுத்தை தனது குட்டிகளுடன் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால், வனத்துறையினர் டிரோன் கேமரா அமைத்து தீவிரமாக சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சிறுத்தை பூங்குளம் மலைப்பகுதியில் பாறை மீது ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது திடீரென கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த சேவல் மற்றும் கோழிக்குஞ்சுகளை விரட்டிவிரட்டி கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததனால் பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு மலைப்பகுதிக்கு கொண்டு செல்வதில்லை.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் வீரிசெட்டிப்பள்ளி பீட் மற்றும் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணிக்குச் சென்றனர். மேலும், அங்குள்ள மரங்களில் டிரோன் கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிட வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை அறிந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leopard movement in vellore kudiyaththam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->