காலையிலேயே பரபரப்பு! புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!
Life sentence prisoner committed suicide in chennai puzhal jail
திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டையை சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கஜாவுக்கு 63 வயதாவதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை கழிவறைக்கு சென்ற கஜா என்கிற கஜேந்திரன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவருடன் இருந்த சக கைதிகள் கழிவறைக்கு சென்று பார்த்த போது கழிவறையின் ஜன்னலில் தான் வைத்திருந்து துண்டை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கஜேந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிறைத்துறை டிஜிபி அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் அனைத்து சிறை காவலர்களும் உடனடியாக சோதனை மேற்கொண்டு கைதிகளிடம் கூர்மையான பொருட்கள் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து உடனடியாக மீட்க வேண்டும் எனவும், தொடர்ந்து ரேந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் எனவும், சிறையில் தற்கொலை நிகழாத வண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Life sentence prisoner committed suicide in chennai puzhal jail