தமிழகத்தில் LKG மற்றும் UKG பள்ளிகள் திறப்பது குறித்து நாளை ஆலோசனை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKGவகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2,381 அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வியாண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

மேலும், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும், வரும் 13-ஆம் தேதி 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG and UKG class open tomorrow discuss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->