திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.!
Local holiday in Trichy
ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.