இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
local holiday to tirunelveli and thothukudi district
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதப்படும் அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம்.
அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையாக விடப்படுவதாக இரு மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் நடத்தப்பட உள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
local holiday to tirunelveli and thothukudi district