இரண்டு லாரிகள் மோதி விபத்து - ஓட்டுநர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் செல்வம் (வயது60). இவர் மும்பையில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரியில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது வேடசந்தூர் அருகே இன்று காலை வந்தபோது, டீ குடிப்பதற்காக லாரியை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்பொழுது மதுரை நோக்கி பஞ்சு பேரல் ஏற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் மிகவும் சேதம் அடைந்த நிலையில், லாரியில் இருந்த செல்வம் ஈடுபாடுகளில் சிக்கி, அவரது கால் துண்டானது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிய செய்து வந்த போலீசார் படுகாயமடைந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry accident in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->