இன்ஸ்டாகிரிமில் பழகிய பள்ளி மாணவி - லாரி ஓட்டுநர் செய்த கொடூரம்.!
lory driver arrested for harassment in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. லாரி ஓட்டுநரான இவர் பள்ளி மாணவியிடம் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாணவியிடம் தன்னை காதலிப்பதாக நைசாக பேசி விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவியை திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
lory driver arrested for harassment in thiruvannamalai