ஆதியோகி சிலை வழக்கு.!! உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை அமைக்க முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ வாங்கவில்லை என தமிழக அரசு விளக்கம்.!

கோவை வெள்ளையங்கிரி மலை பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதி யோகி சிலை மற்றும் அது அமைந்திருக்க கூடிய இடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் அமைப்பதற்கு முன் அனுமதியோ, தடையில்லா  சான்றிதழோ பெறவில்லை.

ஆதியோகி சிலை அமைப்பதற்கான திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி, வழிபாட்டுத்தல சான்றிதழ் என எதையும் ஈசா யோகா மையம் வாங்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவணங்களை ஆய்வு செய்து உரிய அனுமதி பெறாவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகரத் திட்ட இணை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC ordered to take action against Adiyogi statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->