கல்வெட்டில் பெயர் இல்லாததால் போராட்டம் நடத்திய மதுரை துணை மேயர்.! - Seithipunal
Seithipunal


கல்வெட்டில் பெயர் இல்லாததால் போராட்டம் நடத்திய மதுரை துணை மேயர்.!

மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜனுக்கும் கடந்த சில மாதமாகவே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் மேயர் இந்திராணி பேசியதாவது:- 

 "மாநகராட்சி வார்டுகளில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் தன்னுடைய பெயரை திட்டமிட்டே சேர்க்கப்படுவதில்லை என்றும், மாநகராட்சி விழாக்கள், கூட்டங்களுக்கு தன்னை அதிகாரிகள் முறைப்படி அழைப்பதில்லை என்றும், மாநகராட்சி நிர்வாகப்பணிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் கல்வெட்டுகளில் தன்னுடைய பெயரை சேர்க்காவிடில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்,இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சியில் ஐந்தாவது மண்டல குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மண்டலத் தலைவர் சுவிதா மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே, மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன், மேயர் இந்திராணி பங்கேற்ற கூட்டத்தை புறக்கணித்ததோடு, அந்த அலுவலகத்தில் உள்ள 75-வது சுதந்திர தின பவள விழா கல்வெட்டில் தன்னுடைய பெயர் வைக்காததை கண்டித்து, அந்த கல்வெட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த மேயர் இந்திராணி, துணை மேயரிடம் செல்போனில் பேசியதை அடுத்து துணை மேயர் நாகராஜன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai deputy meyar protest for no name in inscription


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->