நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு.!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத் தலைவரான இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்:- ”சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. 

இங்கு சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் திருவிழா நடைபெறும். அந்த இடத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். ஆனால், இந்த காலியிடத்தில் சிலர் கட்டிடம் கட்டினர். இது குறித்து புகார் அளித்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் படி மூன்று நாட்களுக்கு மட்டும் கட்டுமானப் பணியை நிறுத்தியவர்கள் தற்போது மீண்டும் கட்டுமானப் பணியை ஆரம்பித்துள்ளனர். ஆகவே, கோயில் அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் வணிகக் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்பு இருந்தால் எட்டு வாரத்தில் அகற்ற வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

ஆனால்,  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதற்கிடையே மனுதாரர் சின்னசாமி இறந்துவிட்டார். அதனால், அவரது சார்பில் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி வாணி ஜெயராமன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி உள்ளிடோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், "நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

அதற்காக கால அவகாசமும் கோரவில்லை. ஆகவே, தென்காசி மாவட்ட ஆட்சியர், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர், சிவகிரி வட்டாட்சியர் ஆகியோர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்கிறது. மேலும், இவர்கள் மூன்று பெரும் இந்த வழக்கில் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order to tenkasi collector apear in contempt of court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->