மதுரை | முன்விரோதம் காரணமாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு! 2 இளைஞர் கைது!
Madurai house and tea shop thrown petrol bombs
மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதலின் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சியதால் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்:
சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகே உள்ள கட்டமன்கோட்டையைச் சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் சவுந்திரபாண்டியன். இவர் நெடுங்குளம் பிரதான சாலை சத்யா நகரில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சவுந்திரபாண்டியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கு கடந்த 18 ஆம் தேதி பொது பாதை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில் அந்த ஊரைச் சேர்ந்த சப்பாணி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சப்பானி வீட்டு வாசலில் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதனை தொடர்ந்து, சவுந்திரன் டீக்கடையின் முன்பாகவும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கட்டமன்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் மாதவன் (வயது 20) மற்றும் மூர்த்தி மகன் பிரசன்னா (வயது 25) ஆகிய இருவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இருவருக்கும் ஏற்கனவே நடந்த மோதலின் எதிரொளியாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தனை அடுத்து, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
English Summary
Madurai house and tea shop thrown petrol bombs