மகா விஷ்ணு விவகாரம்! மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் ! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று பேசிய இவரின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார்.

 

இதற்கிடையே பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது என்றும், மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு. கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று, அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

 

இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மகா விஷ்னுவை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha Vishnu issue Disabled Persons Commission Notice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->