பராமரிப்பு பணி! எடப்பாடி நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட, எடப்பாடி கோட்ட துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும்,

இதன் காரணமாக, எடப்பாடி நகரம், ஆவணியூர், தாதாபுரம், வேம்பனேரி, வி.என்.பாளையம், குரும்பப்பட்டி, மலயனூர், வேலம்மாவலசு, அம்மன் காட்டூர், தங்கயூர், எருமைப்பட்டி மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maintainance work EB sub station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->