மகளிர் உரிமைத் தொகை! விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவுப்பு!
Makalir urimai thogai new announce soon
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாடு அரசால் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது.
தற்போது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.
இருப்பினும், தகுதி இருந்தும் இன்னும் சிலர் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, இத்திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியானவர்கள் அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், புதிய பயனாளிகளைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், காத்திருக்கும் பயனாளிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Makalir urimai thogai new announce soon