ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் அத்து மீறல் - வாலிபர் கைது.!!
man arrested for harassment in train
சமீப காலமாகவே ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் அத்து மீறுவது, தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தடுப்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயிலில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு எஸ்.2 பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரெயில், நேற்று அதிகாலை 5 மணியளவில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் கீழ்தாலூர் பகுதியை சேர்ந்த மணி மகன் கண்ணன் என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது.
இதனால் அச்சமடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரெயில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment in train