பள்ளி வேனில் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக பிடிபட்ட கிளீனர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். இந்த வேனில் பல்வேறு இடங்களில் இருந்து, மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி வேனில் வரும் பத்து வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சிறுமி, ஒரு கட்டத்தில் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் படி பெற்றோருடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமி, தனக்கு நடந்ததை எல்லாம் போலீசிடம் கூறி புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for harassment to school student in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->