நெல்லையில் இளம்பெண் கொலை.! தியேட்டரில் படம்பார்த்து கொண்டிருந்த மாமனாரை மடக்கிப்பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் இளம்பெண் கொலை.! தியேட்டரில் படம்பார்த்து கொண்டிருந்த மாமனாரை மடக்கிப்பிடித்த போலீசார்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி அருகே கேபிரியல்நகரை சேர்ந்தவர் தமிழரசன்-முத்துமாரி தம்பதியினர். இதில் முத்துமாரி கடந்த 7-ந்தேதி முத்துமாரிக்கும்  தமிழரசனின் தந்தை தங்கராஜூக்கும் இடையே நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. 

அப்போது தங்கராஜ் ஆத்திரத்தில், கடப்பாறையால் முத்துமாரியை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  உயிரிழந்தார். இதற்கிடையே முத்துமாரியின் உறவினர்கள் தங்கராஜூவை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீசார் தங்கராஜுவைத் தீவிரமாகத் தேடிவந்தனர். 

அப்போது, நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில், கொலை செய்யப்பட்ட முத்துமாரியின் இருசக்கர வாகனம் நின்றது. இதைத்தொடர்ந்து அந்த தியேட்டருக்குள் சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு தங்கராஜ் படம் பார்த்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். 

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், தெரிவித்ததாவது:- "தமிழரசன் எனது பெயருக்கு பணம் அனுப்பி இட்டேரியில் 12 சென்ட் நிலத்தை முத்துமாரி பெயருக்கு வாங்குமாறுத் தெரிவித்தார். ஆனால் அந்த நிலத்தை எனது பெயருக்கு வாங்கினேன். இதுகுறித்த தகவலை முத்துமாரி தமிழரசனிடம்  தெரிவித்தார். 

இதனால் எனது மகனுக்கும், எனக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. என் மகனிடம் முத்துமாரி புகார் தெரிவித்தது குறித்து அவரிடம் நான் கேட்டபோது என்னாகும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான் முத்துமாரியை கடப்பாரையால் தாக்கினேன். இதனால் அவர் உயிரிழந்துவிட்டார்" என்று தங்கராஜூத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill woman in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->