கணவன் மனைவி சண்டையில் தலையிட்ட உறவுகார பெண்.. பழிவாங்க கணவன் செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


பெண் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி  ஆபாச படங்களை பகிர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின்  அடையாளத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கடந்த ஓராண்டாக ஆபாச படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் ஆவடியை சேர்ந்த குமார் என்பவரை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில்  தகராறு ஏற்பட்டதாகவும். அதில் உறவுக்கார மதுரையை சேர்ந்த பெண் தலையிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆபாச படங்களை பதிவிட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர்சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested In madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->