11ம் வகுப்பு மாணவியுடன் திருமணம்.. 45 வயது நபர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை திருமணம் செய்த 46 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செந்தில. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக கூறிய செந்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரை திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்ததோடு பல இடங்களில் தங்கவைத்து பாலியல் வன் கொடுமையும் செய்துள்ளார். சிறுமியை காணது அவர் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் செந்திலை கைது செய்தனர்.

மேலும், சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, செந்திலை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர்  அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested In POCSO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->