எம்.ஜி.ஆர் வேடத்தில் கையில் பாஜக கொடியுடன் நடனமாடிய வாலிபர் - சலசலப்பில் அதிமுக வட்டாரம்.!!
man dance with bjp flag and mgr costiume
கோயம்புத்தூரில் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த வாலிபர் ஒருவர் கையில் பாஜக கொடியுடன் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர். வேடத்தில் பாஜக கொடியுடன் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த நபர் பாஜக கொடியுடன் நடனமாடிய விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து பேசிய நிலையில் தற்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
man dance with bjp flag and mgr costiume