சத்தியமங்கலத்தில் சோகம்.. காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு.!
man died for wild elephant attack in sathyamangalam
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் அதிகளவில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே முதியனூர் ஊரைச் சேர்ந்த ராமு நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்துள்ளார். அப்போது திடீரென காட்டுக்குள் இருந்து வந்த யானையொன்று பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த ராமு யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றுள்ளார்.
உடனே அந்த யானை ராமுவை துரத்தி தனது தும்பிக்கையால் தூக்கி போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ராமுவின் உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
man died for wild elephant attack in sathyamangalam