#கரூர் || இளம்பெண்ணை கிண்டல் செய்த இளைஞர் அடித்து கொலை..!
Man Murder in karur
இளம் பெண்ணை கிண்டல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த அரவிந்தன். தனது நண்பரான சூர்யாவுடன் கடந்த திங்கட்கிழமை பக்கத்து ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றார்.அங்கு வந்த இளம்பெண் ஒருவரை சூர்யா கிண்டல் செய்ததாக தெரிகிறது.
அந்த பெண்ணின் உறவினர்கள் சூர்யாவை கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அந்த பெண்ணின் உறவினர்கள் அரவிந்த் மற்றும் சூர்யாவை தாக்கியுள்ளனர் .இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சூர்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அந்த பெண்ணின் உறவினர் ஒருவரை தேடி வருகின்றனர்.