வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்.! சென்னை அருகே 170 கி.மீ தொலைவில்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும், தற்பொழுது மாண்டஸ் புயலின் வேகம் 13 லிருந்து 14 கி.மீ அதிகரித்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நாளை தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்றும், மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandous cyclone 170 kms away from Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->