மயிலாடுதுறையில் புதிய மின்மாற்றிகள் தொடக்க விழா!
mayiladuturai new transformers open funcition
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே உள்ள காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவானது, மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மயிலாடுதுறை ராமலிங்கம், எம்.பி, நிவேதா முருகன், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்த விழாவில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், உள்பட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
English Summary
mayiladuturai new transformers open funcition