சென்டிரல் ரயில் நிலையம்... வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த வாலிபர்...! - Seithipunal
Seithipunal


நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து சென்டர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்காது நிலையில், இது புரளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போன் செய்தவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது.

மேலும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனின் பெற்றோரிடம் இதுபோன்று மற்றொரு முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mentally challenged youth who gave bomb threat to Chennai Central railway station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->