மெட்ரோ ரயிலின் இயக்கத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுப்பவர்களுக்கு தக்க தண்டனையாக அபராதமும் 4 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது உடன் ரயில் கதவுகளை சிலர் மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 4 வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதிக்கப்படும். 

மேலும் ரயிலின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக வாடிக்கையாளர் உதவி என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train obstructing movement Strict action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->