மேட்டூர் அனல் மின் நிலையம்: அதிரடி சோதனையில் இறங்கிய வருமான வரித்துறை! - Seithipunal
Seithipunal


மேட்டூர், அனல் மின் நிலையத்தில் இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் வருமான வரி புகாரின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு பொருள் கொள்முதல் செய்யும் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது. 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பொருள்களின் தரம், விலை தொடர்பாக 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றது. 

மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம், வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் சரிபார்த்து வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Thermal Power Station Income Tax Department investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->