#BREAKING :: நிம்மதி பெருமூச்சு விட்ட திமுகவினர்.. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ்..!!
Minister Durai Murugan Discharged from Apollo hospital
திமுகவின் பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துறைமுருகன் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் துரைமுருகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த ஆண்டு அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பொழுது நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த 24 மணி நேரமாக மருத்துவரின் முழு கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவே மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் மற்றும் வயோதிகம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்பொழுது அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் உடல்நிலை தேரிய பின்பு தனது அரசாங்க பணிகளை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Minister Durai Murugan Discharged from Apollo hospital