அதிர்ச்சியில் திமுக - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி..!
minister kkssr admitted hospital in chennai
தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதனால் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான பரிசோதனை என்றுக் கூறப்பட்டாலும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியான பின்பே உண்மை நிலவரம் தெரியவரும்.
அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை பார்க்க திமுக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
minister kkssr admitted hospital in chennai