விஜயை நங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டது இல்லை - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ரகுபதி.!
minister ragupathy speech about tvk leader vijay
தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கையெழுத்திடுவார்கள். மாணவ-மாணவிகள், தமிழ்ப்பற்று உள்ளவர்கள் யாரும் கையெழுத்திட மாட்டார்கள்.
பாஜகவினரோடு மற்ற கட்சியினர் இணைகிறபோதும், மற்ற கட்சியினரோடு கூட்டணி வைக்கும்போதும் ஆங்காங்கே வாய்ப்பு கிடைக்கிறதே தவிர, நிச்சயமாக தமிழ் மண்ணில் பாஜக காலூன்ற முடியாது. மத்திய அரசின் கையில் அமலாக்கத்துறை உள்ளதால் யார் மீது வேண்டுமானாலும் ஏவி விடலாம். எந்த சோதனைகளையும் நடத்தலாம்.

இதற்கு தக்க பதிலை நீதிமன்றத்திலே நிரூபிக்க முடியும். சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் சோதனை மத்திய அரசின் பழி வாங்கும் செயலாக எடுத்துக்கொள்ளலாம். அவர்களது வளர்ச்சியை தடுப்பதற்காக இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபடலாம். மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்துவார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
நடிகர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டது இல்லை. சிறுபான்மையின மக்களை கவருவதற்காக நடிகர் விஜய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறுகிறீர்கள். சிறுபான்மையினர் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் யாரும் ஏமாளிகள் அல்ல. யாா் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.
அவர்களுக்கு உண்மையான நண்பன் யார்? தோழமை உணர்வோடு இருக்கக்கூடியது யார்? என்பது சிறுபான்மையின மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் நம்ப தயாராக இல்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister ragupathy speech about tvk leader vijay