கல்லூரி முன்பு பேருந்து நிற்கவில்லை என்ற செய்தி தவறு - அமைச்சர் சிவசங்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 22ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகை புரிந்தார். அப்போது, சிவகங்கை- திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். 

அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் உடனடியாக அந்த கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல உத்திரவிட்டார். ஆனால் கல்லூரி முன்பு பேருந்துகள் நின்று செல்லவில்லை என்றும் முதலமைச்சரின் உத்தரவை பின்பற்றப்படவில்லை என்றும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:- பேருந்துகள் நின்று செல்லாதது குறித்து செய்தி வெளியானதையடுத்து, உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், கல்லூரி முதல்வரிடம் சென்று பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தார்.

அதுமட்டுமல்லாமல், துணை மேலாளரிடம் கல்லூரி முதல்வர், முதலமைச்சருக்கும் எனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister sivasangar speech about bus no stop issue fake


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->