தமிழ் வழியில் மருத்துவகல்வி - அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு.!
minister subramaniyan info medical education in tamil way
தமிழகத்தில் தமிழ் வழியில் மருத்துவ பாட புத்தகம் வரவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே கிண்டியில் மாருதி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நிரூபர்கள் தரப்பில் இருந்து தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என்று மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறையை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister subramaniyan info medical education in tamil way