அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு: வருத்தம் தெரிவித்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்!
Minister Udayanidhi defamation issue admk regret
அ.தி.மு.க மாவட்ட செயலாளர், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்தார்.
.
கள்ளக்குறிச்சி, மந்தைவெளி பகுதியில் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுரு அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து தி.மு.கவினர் மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் குமரகுரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து குமரகுரு முன் ஜாமின் பெற சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரணை செய்த நீதிபதி, முறையாக அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தி அதில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் படி நேற்று கள்ளக்குறிச்சி, மந்தவெளியில் அ.தி.மு.க மதுரை மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் குமரகுரு நான் அவதூறாக பேசியது வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தேன்.
இப்போதும் இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி குறித்து புண்படும்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனறார்.
அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அமைதி நிலவியது.
English Summary
Minister Udayanidhi defamation issue admk regret