மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி பேச்சு.! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற பெயரில் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அந்த வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள். 

ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்

அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜனதாவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech in ramanathapuram dmk meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->