ரூ.1,000 தருகிறோம்.. திராவிட மாடல் ஆட்சிய வாழ்த்திட்டு பொங்கலை கொண்டாடுங்க..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக அரசால் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது நிலையில் வரும் பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000  ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என தமிழக முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஏ.வ வேலு தமிழக அரசு தரும் ஆயிரம் ரூபாயில் மற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என பேசி உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர் "கரும்பு கொடுத்தாலும் அரை கரும்பு கொடுத்தீங்க, முக்கா கரும்பு கொடுத்தீங்க என புகார் சொல்வார்கள். முந்திரிப் பருப்பு வாங்கி கொடுத்தால் சரி இல்லை என புகார், வெல்லம் வாங்கி கொடுத்தால் உருகுவதாக புகார்.

இதற்கு பெயரே சர்க்கரை பொங்கல் தான், பொங்கல் என்றால் முதன்மையாக வந்து நிற்பது சக்கரை பொங்கல். எனவே ஒரு கிலோ சர்க்கரையையும், பச்சரிசியையும் கொடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். பிறகு நீங்கள் எதை எல்லாம் கொடுக்கவில்லை என குறை காண நினைக்கிறீர்களோ அதையெல்லாம் மனதில் எடுத்துக் கொண்டு உங்கள் விருப்பப்படி கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை வாங்கிக் கொள்ளலாம். அதற்காகத்தான் தமிழக முதல்வர் கூடுதலாக ரூ.1,000 ரொக்கத்தை அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஆயிரம் ரூபாய் உடன் பச்சரிசி, சர்க்கரையை பெற்றுக்கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக செய்தார்கள் என வாழ்த்தி விட்டு பொங்கலை கொண்டாடலாம்" என பேசியுள்ளார். தமிழக முழுவதும் விவசாயிகள் கரும்பு கொள் செய்யக்கோரி போராடிவரும் நிலையில் அமைச்சரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Velu spoke celebrate pongal with Dravidia Model Ruler


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->