முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்!
MK Stalin's Birthday Celebrations DMK Distributes Welfare Assistance To The Poor
திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள் 72 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள் தலைமை தாங்கினார் - படூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி: தாராசுதாகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார் .திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரு.எஸ்.எம்.ஏகாம்பரம் அவர்கள், ஏ.ரமேஷ் அவர்கள், திரு.ராஜாராம் அவர்கள், திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், திரு.ஏ.கருணகரன் அவர்கள் , திரு.மு.மயில்வ்கனன் அவர்கள், திரு.என்.ஜி.கெஜராஜன் அவர்கள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு.கே.ஏ.எஸ்.சுதாகர் அவர்கள் , கிளை கழக செயலாளர்கள் திரு.ஆர்.சேகர் அவர்கள் , திரு.து.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரையாற்றி நலத்திட்டங்கள் வழங்கிகாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் கழக சிறப்பு பேச்சாளர் திரு.நாஞ்சில்சம்பத் அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்,
இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.ஜி.சி.அன்புசெழியன் அவர்கள், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பேரூர் கழக செயலாளர் திரு.மு.தேவராஜ் அவர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.வீ.விஜயகுமார் அவர்கள், மாவட்ட , ஒன்றிய , கிளை கழக , அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
English Summary
MK Stalin's Birthday Celebrations DMK Distributes Welfare Assistance To The Poor