மாதம் 1000 - 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
monthly 1000 to eight class student in tamilnadu
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://.dge1.2tn.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூபாய் 50 தேர்வு கட்டணத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஜனவரி 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக, வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் நிலவி வந்தது.
ஆகவே, இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற டிசம்பர் 27-ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
monthly 1000 to eight class student in tamilnadu