குழந்தைகள் உணவில் விஷம் வைத்த தாய்.. ஒன்றரை வயது குழந்தை பலி.. அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


திருமணத்தை தாண்டிய உறவிற்காக குழந்தை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் . இவருக்கு திருமணமாகி கார்த்திகா  என்ற மனைவியும் சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை, மற்றும் ஒன்றரை வயதில் சரண் ஆண் குழந்தையும் உள்ளது. வீட்டில் விளையாடி கொண்டிருந்த சரண் எலி மருந்தை சாப்பிட்டு  மயக்கமடைந்ததாக ஜெகதீஷனுக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த அவர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை தானாக எடுத்து சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை மேலும், குழந்தையின் தாய் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரின் செல்போன் அழைப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில், மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில்  என்பவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கார்த்திகாவிற்கு திருமணமாகியது தெரியாமல் பழகி வந்ததாகவும் திருமாணது தெரிந்ததால் அவரை விட்டு விலகியதாகவும் தெரிவித்தார்.

அதனை அடுத்து,  கார்த்திகாவிடம் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புகொண்டார். சுனிலுடன் பழகிவந்த நிலையில் இரு குழந்தைகளையும் கொன்றால் ஏற்றுகொள்வான் என நினைத்தாக தெரிவித்தார். அதற்காக கணவனிடம் எலிதொல்லை இருப்பதாக கூறி எலிமருந்து வாங்கி வர சொல்லி அதனை குழந்தைகள் ஆசையாக சாப்பிடும் சேமியா உப்புமாவில்  கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மகள் குறைவாக சாப்பிட்டதால் தப்பித்து கொண்டதாவும்  தெரிவித்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை சஞ்சனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Kills His Son In Kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->