மதுரையில் மெட்ரோ சேவை.. மதுரை மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி - எம்.பி சு.வெங்கடேசன்.! - Seithipunal
Seithipunal


தமிழக பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட் தாக்கல் சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை போல மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கு 8,500 கோடி ரூபாயும், கோவை மெட்ரோ ரயில் சேவைக்கு 9,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

அந்த பதிவில் 'மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணப்பட “மதுரை மெட்ரோ திட்டம்” அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 8500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP S Venkatesan thanks to MK Stalin for madurai metro


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->