தேனியில் பயங்கரம்.! கொடூரமான முறையில் பெண் படுகொலை... போலீசார் தீவிர விசாரணை...!
Murder of a woman in a brutal manner in theni
தேனி மாவட்டத்தில் கொடூரமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் 14 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சமுத்திரக்கனி(48). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சமுத்திரக்கனி, இரண்டாவது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சமுத்திரக்கனி அவரது வீட்டு முன்பு ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கை, கால், மார்பு என பல இடங்களில் கொடூரமாக வெட்டப்பட்டு கிடந்த சமுத்திரக்கணியை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வருசநாடு போலீசார் சமுத்திரக்கனியை கொலை செய்தவர்கள் யார்? கள்ளக்காதல் பிரச்சனையா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சொக்கர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Murder of a woman in a brutal manner in theni