மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


முத்துலட்சுமி ரெட்டி :

மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.

அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.

தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

எதையும் தடைக்கற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 82வது வயதில் (1968) மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthulakshmi Reddy Birthday 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->