நாகை : கள்ள நோட்டு அச்சடித்த சிறுவர்கள்.. கூட்டு சேர்ந்து செய்த சம்பவத்தால் பரபரப்பு.!
Nagai boys illegally make fake money
நாகை மாவட்டத்தில் இருக்கும் வேதாரண்யத்திற்கு அருகே கத்தரிப்புலம் என்ற பகுதியில் மூன்று பேர் கள்ள நோட்டு தயாரிப்பதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசாரின் தொடர் முயற்சியில் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் மூன்று சிறுவர்கள் கையும் களவுமாக சிக்கி உள்ளனர். வெறும் 14 மற்றும் 15, 16 வயதுடைய அந்த 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மூன்று சிறுவர்களும் சேர்ந்து உறவினரின் ஸ்டுடியோவில் கள்ள நோட்டுகளை ஸ்கேன் செய்து பிரிண்டர் மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. என்னை தொலைந்து போலீசார் அவர்கள் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கணினி மற்றும் ஸ்கேன் எந்திரங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆசிரியர் படுத்தி தஞ்சையில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவர்களை போலீசார் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Nagai boys illegally make fake money