தண்ணியை திறந்திவிட்டு 3 பேர் பலி! தமிழக அரசே பொறுப்பு - கொந்தளிக்கும் பாஜக நாராயணன் திருப்பதி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு பத்து லட்சம் வழங்கிய தமிழக அரசு,  ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் அதிகாலை குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க கூட முன் வராதது ஏன்? 

முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் அந்த சிறுவர்கள் உயிரிழந்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கே  காரணம். தமிழக அரசே இத‌ற்கு பொறுப்பு.

இளம் சிறுவர்களை இழந்து வாடும் அந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று பத்து லட்சம் வழங்கிய அரசு,  தனது தவறுக்கு பொறுப்பேற்று மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.  

முறையான அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்ட அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யபட்டு கைது செய்யப்பட வேண்டும்.  அப்படி செய்வதன் மூலம் மட்டுமே இனி கடமையை உணர்ந்து அரசு அதிகாரிகள் பணியாற்றுவார்கள்.

ஆறாக ஓடிய கள்ளச்சாராய தண்ணியில் உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம்,  காவேரி தண்ணீரில் அரசின் மெத்தனப் போக்கால் உயிரிழந்தவர்களுக்கு பாரா முகமா?" என்று  நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan Thirupathy condemn to tngovt for sri rangam accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->