சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த வருடமும் அதேநிலை தான்.! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தின் நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நடராஜர் கோவிலில் தேர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மன் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும், ஆனால் தரிசனம் முடிந்த பிறகு நாளை மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ் சன்னதி வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்துள்ளார்.

இதற்கியே, நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natarajar Arudra Darisanam Therottam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->