சென்னையில் நிலநடுக்கமா? தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் அருகில் இருந்த 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த கட்டடங்களில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நில அதிர்வு குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சென்னை முழுவதும் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால் நில அதிர்வு ஏற்பட்டிருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள மெட்ரோ நிர்வாகம் "நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் பகுதியில் எந்த மெட்ரோ பணியும் நடைபெறவில்லை. மெட்ரோ பணிகள் ஏற்கனவே முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை" என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை, மிக குறுகிய இடத்திற்கு மட்டும் நில அதிர்வு உணரப்படாது, அப்படியிருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என் நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய நில அதிர்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National earthquake center explained Chennai Shaking


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->