அடேங்கப்பா திட்டம்! பைப் மூலம் இயற்கை எரிவாயு...!!! சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு...!!!
Natural gas through pipes 9 districts including Chennai
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதில், சென்னை உள்பட 9 மாவட்டங்களில், தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், சென்னையில் நீலாங்கரை, சேப்பாக்கம், தண்டயார்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், ராயபுரம், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், 466 கி.மீ. நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ. ஆணைய பகுதிகளில் வருகிறது.இது ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை 'டோரண்ட் கேஸ்' நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
இது இல்லத்தரசிகளுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
English Summary
Natural gas through pipes 9 districts including Chennai