தருமபுரி : எனக்கு பொண்டாட்டி வேணாம்.. காதலி தான் வேணும்... வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரசூல்-ஹாய்ஸ்யா பானு தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரசூலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ஹாய்ஸ்யா பானு அதனை கைவிடுமாறு கெஞ்சியும் ரசூல் விடாததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.  

அதன் படி, போலீசார் ரசூலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கள்ளத் தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரசூல், ‘நான் காதலியுடன்தான் வாழ்வேன். இல்லையேல் செத்துவிடுவேன்‘ என்று ஆவேசமாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

பின்னர் ரசூல் சாலைகளில் சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து காதலியுடன் தான் வாழ்வேன் மனைவி வேண்டாம் என்று ரகளை செய்துள்ளார். இதையறிந்த ரசூலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விரைந்து சென்று அவரை அடித்து, இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். 

இதையடுத்து போலீசார்கள் அவரை அடித்து, இழுத்து வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dharmapuri man arrested for stop vechicles on road with fight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->