திருநெல்வேலி || நைட்டோட நைட்டா கல்வெட்டை வச்சது யாரு? - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி புதிய எல்லைகளுடன் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது.

இதையடுத்து, அந்த தாலுகாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் சுமார் 3 கோடி செலவில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு தாலுகா அலுவலக கட்டிடமும் அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, அந்த தாலுகா அலுவலக கட்டிடத்தை சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்நிலையில், அந்த தாலுகா கட்டிடத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை யாரோ பதித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் இன்று காலை அந்த கல்வெட்டை பார்த்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  வருவாய்த்துறை அதிகாரிகள் கல்வெட்டை அங்கிருந்து அகற்றினர். 

இதைத்தொடர்ந்து, இரவோடு இரவாக அந்த கல்வெட்டை அங்கு கொண்டு வந்து வைத்தது யார்? என்று திசையன்விளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli taluk office eps name inscription


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->