அனைவருக்கும் நான் அரசு வேலை கொடுக்கிறேன் - சீமான் பேட்டி..!
near tiruvannamalai Farmers strike ntk seeman press meet
விமானநிலையம் அமைப்பதற்காக விவசாய நிலத்தினை எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனக்காவூர் ஒன்றியத்தில் ஒன்பது கிராமங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து விவசாயிகள் திரள் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்தப் போராட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
“அனைத்து விவசாய நிலங்களையும் தொழிற்சாலை, விமான நிலையம் என்று பறித்துக் கொண்டால் சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள். உலக நாடுகளின் பட்டினிக் குறியீட்டு தர வரிசையில் மொத்தம் 127 நாடுகள் உள்ளன. அதில் இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா பஞ்சப் பிரதேசமாக மாறிக்கொண்டு வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகளைப் பட்டினி போட்டு என்ன வளர்ச்சியைக் கட்டமைக்கிறீர்கள். விளைச்சலுக்குப் பயன்படாமால் உள்ள இடங்களில் தொழிற்சாலை கட்டுங்கள். நாடு முழுவதும் விவசாய மக்களுக்கு இந்த நிலைமை தான் நடக்கிறது. நான் இருக்கும் வரை இங்கு ஒரு செங்கல் கூட நீங்கள் கொண்டு வர முடியாது. ஓசூரில் டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலத்தை கொடுத்தோம். ஆனால், 800 பெண்களை ஜார்கண்டில் இருந்து கொண்டு வந்து வேலை கொடுக்கிறார்கள். நிலத்தை கொடுத்து விட்டு நாங்கள் என்ன செய்வது.
அனைவருக்கும் நான் வேலை தருகிறேன். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் கட்டி, காற்று, நிலம், நீர் எதுவும் நஞ்சாகாமால், படித்தவர், படிக்காதவர் என்று அனைவருக்கும் அரசு வேலை கொடுக்கிறேன். இதற்கு திட்டமும் சொல்லுகிறேன். தொழிற்சாலை என்ற பெயரில் விவசாய நிலங்களை முதலாளிகளுக்கு பறித்துக் கொடுத்தீர்கள்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
near tiruvannamalai Farmers strike ntk seeman press meet