விருதுநகர் : நீட் தேர்வு பயம்.. மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகள் காவியா (வயது 19). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 476 மதிப்பெண்கள் பெற்றார்.

இதில் மாணவி காவியாவிற்கு டாக்டராக வேண்டும் என்பது லட்சியம். அதன் காரணமாக 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு நீட் தேர்வுக்கு தயரானார். இதற்காக பயிற்சி வகுப்பிற்கும் சென்று படித்து வந்துள்ளார். இதில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மனைவியால் வெற்றி பெற முடியவில்லை.

 இந்த நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். இந்த நிலையில் கடந்த வாரம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவி இந்த தேர்விலும் தேர்ச்சி பெற முடியாது என கருதியுள்ளார்.

 இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த மாணவி காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயக்கம் அடைந்துள்ளார். அதன் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு வைத்தால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET exam fear virudhunagar student try suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->